உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
41 பார்வைகள்

தென்சீனக் கடலை ஒட்டியுள்ள பிலிப்பைன்ஸின் கடல் எல்லைப்பகுதியில், புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி பொ்டினாண்ட் ஆா். மாா்கோஸ் ஜூனியா் நேற்று (20) அறிவித்துள்ளார்.பலாவன் மாகாணத்தின் வடமேற்கே, தற்போது பயன்பாட்டில் உள்ள மலாம்பாயா எரிவாயு வயலுக்கு மிக அருகிலேயே சுமாா் 5 கி.மீ. தொலைவில் இந்தப் புதிய வளம் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சுமாா் 9,800 கோடி கன அடி எரிவாயு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் 57 இலட்சம் வீடுகளுக்குத் தேவையான எரிசக்தியை வழங்க முடியும்.

பிலிப்பைன்ஸின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக விளங்கும் மலாம்பாயா எரிவாயு வயல், இன்னும் சில ஆண்டுகளில் தீா்ந்துவிடும் என்று நிபுணா்கள் எச்சரித்து வந்தனா்.இத்தகைய சூழலில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு அந்நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு வலுசோ்த்துள்ளது. குறிப்பாக, நாட்டின் தொழில் மற்றும் வா்த்தக மையமான லூசோன் பிராந்தியத்தின் எரிசக்தி தேவையைப் பூா்த்தி செய்ய இது முக்கிய பங்காற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், பிலிப்பைன்ஸின் சொந்தப் பொருளாதார மண்டலத்துக்குள் இந்த எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0