உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பின் அமைதி சபையில் இணைவதற்கு மொராக்கோ இணக்கம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
54 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமைதி சபையில் இணைவதற்கு வட ஆபிரிக்க நாடானா மொராக்கோ இணக்கம் தெரிவித்துள்ளது.அமைதி சபையில் இணைவதற்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இன்று (20) அறிவித்தார்.

ட்ரம்பின் விரிவான அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும், காஸா நிர்வாகத்திற்கான தேசிய குழுவின் உத்தியோகபூர்வ உருவாக்கத்தையும் வரவேற்கின்றோம் எனவும் அவர் கூறினார்.ஐ.நா. சபைக்கு மாற்றீடாகவே அமைதிசபையை நிறுவும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.இந்நிலையில் ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தெரியவருகின்றது.

இந்த நகர்வு ஐ.நா.சபையை குறைமதிப்புக்கு ஏற்படுத்தும் என்பதாலேயே அழைப்பை பிரான்ஸ் நிராகரித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பலஸ்தீனத்தின் காஸா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.எனவே, அந்தப் பகுதியை இராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.

அதற்காக உயர்மட்ட ‘அமைதி சபை என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது.இதில் இணையுமாறு இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளுக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0