உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாகாண சபைத் தேர்தல் தாமதம்; அரசின் பயணத்துக்குப் பேராபத்து.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது. இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்பச் செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசின் தொடர்ச்சியான பயணத்துக்குச் சிறந்த பாதையல்ல.”

இவ்வாறு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, வெளிநபர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

எவ்வாறிருப்பினும் பொருத்தமான நேரத்தில் இந்த இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கும்.

மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது.

இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசின் தொடர்ச்சியான பயணத்துக்குச் சிறந்த பாதையல்ல.

உண்மையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை என்பது தெரியாது. அந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான நிதி காணப்பட்டது.

தாம் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு செல்வதாக இந்த அரசு கூறிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறெனில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை அரசே கூற வேண்டும்.

அரசமைப்புக்கமைய செயற்படுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசு கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குப் பொருத்தமான ஒருவரைத் பரிந்துரைக்கத் தவறியிருக்கின்றது. ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர் அரசமைப்பு பேரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட 4 பெயர்கள் அரசமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கணக்காய்வுத் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்படுகின்றது என்றால், அதற்குள் அடுத்தடுத்த நிலைகளில் பொருத்தமானவர் இல்லை என்பதே அர்த்தமாகும். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

50 0 0