உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மறைந்த நந்தன குணதிலக்கவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நந்தன குணதிலகவின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். நமது நாட்டின் அரசியல் பரப்பில் ஒரு புரட்சிகர பாத்திரமாக மக்கள் சேவைக்காக வேண்டி இவர் பாடுபட்டவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மறைந்த நந்தன குணதிலக்கவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) காலை இறுதி அஞ்சலி செலுத்தினர். இச்சமயம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நந்தன குணதிலகவின் பூதவுடலுக்கு முன்னால் இருந்து கொண்டு அரசியல் தொடர்பில் பேசுவது பொருத்தமான விடயமாக நான் கருதவில்லை. நாமனைவரும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கே பாடுபட வேண்டும். இவரது நோய் குறித்து முன்கூட்டியே நான் அறிந்திருந்தால், இவர் சார்பாக இதைவிடவும் கூடிய தலையீடுகளை செய்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவருக்குச் சிகிச்சையளித்த சகல வைத்தியர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யார் எந்த தராதரங்களில் இருந்தாலும், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது யார் என்ன கதைகளைக் கூறினாலும் மனித உயிர் விலைமதிப்பற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

50 0 0