செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை..!
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதியன்று அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று(18) காலை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் பிரகாரம் குறித்த அகழ்வு பிரதேசத்தை யாழ் நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன், ரனித்தா ஞானராஜா, குற்ற புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸார் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டபோது குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.