உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

குழந்தைக்கு எமனாக மாறிய தந்தை – நித்திரை தூக்கத்தினால் நேர்ந்த துயரம்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

பாணந்துறை, பண்டாரகம பிரதேச செயலகத்தின் அலுபோமுல்ல பகுதியில் தந்தையின் கையில் இருந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தந்தையின் கையில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தந்தை எதிர்பாராமல் தூங்கியதால் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ருசேலி கேயாஷா என்ற இரண்டரை மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இரவுப் பணியை முடித்துவிட்டு காலை 6.15 மணிக்கு வீட்டிற்கு வந்த தந்தை, குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த போது அவர் உறங்கியுள்ளார்.

இதன்போது கைதவறி விழுந்த குழந்தையின் தலை சீமெந்து தரையில் பட்டமையினால் மூளைக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக கொழும்பு ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களின் பின்னர் உயிரிழந்ததுள்ளது.

மரண விசாரணை அதிகாரி மரணம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு, குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அழைத்து விசாரித்துள்ளார்.பயம் காரணமாக இந்த விபத்தைப் பற்றி யாரிடமும் கூறாத தந்தை, பின்னர் பொலிஸ நிலையத்திற்குச் சென்று நடந்ததை ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அளுபோமுல்ல பொலிஸார் குழந்தையைச் சரியாகக் கவனிக்கத் தவறிய குற்றத்திற்காக தந்தையை கைது செய்துள்ளனர்.

குழந்தையின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

24 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

49 0 0