உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரச நிதியில் வடக்கில் ‘காட்சி அரசியல்’ நடத்துவதை தேசிய மக்கள் சக்தியினர் நிறுத்த வேண்டும் – சி.வி.கே. சிவஞானம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தியினர் அரச நிதியை பயன்படுத்தி வடக்கு மாகாணத்திற்கு வந்து ‘காட்சி அரசியல்’ நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பிலோ, கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலோ தேசிய மக்கள் சக்தியினர் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தரப்பினர் தலையிடுவதோ, கட்சியை விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

மேலும், மக்கள் மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்த வேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியினரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஆனால், அந்தக் கூட்டங்களுக்கு ஏனைய அரசியல் கட்சிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புகள் விடப்படவில்லை.அதேபோன்று, அழைக்கப்பட்ட சில நிகழ்வுகளிலும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மாறாக, அரச நிதியை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.பி. கட்சியினரே அந்த நிகழ்வுகளில் பிரதானமாக பங்கேற்றுள்ளனர்.

அரச நிதியை பயன்படுத்தி வடக்கில் தேசிய மக்கள் சக்தியினர் ‘காட்சி அரசியல்’ நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, என்.பி.பியினர் வடக்கு மாகாணத்திற்கு வந்து ‘ஷோ’ காட்டும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.இந்த விடயங்களை ஜனாதிபதி உரிய கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். இந்த அரசு தமது அரசியல் நோக்கங்களுக்காக எமது கட்சியை விமர்சிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்விவகாரங்களை நாங்களே கையாளுவோம்” என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

24 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

49 0 0