உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஐந்து இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணியில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் இருந்து விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.அதன்படி, இன்று (19) முதல் குறித்த பணிகளில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.இந்தக் கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்தக் கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.டித்வா புயலினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

ஆனால், இது தொடர்பான சுற்றறிக்கையில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் மற்றும் அரச கணக்காளர்கள் சங்கம் என்பன ஏற்கனவே இந்தப் பணிகளில் இருந்து விலகியிருந்தன.

இதனையடுத்து, அந்தப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.எனினும், இன்று முதல் தாங்களும் அந்தப் பணிகளில் இருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அத்துடன், பேரிடர் கால கடமைகளில் ஈடுபடும் தங்களுக்கு அதற்குரிய போதுமான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

24 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

49 0 0