உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளை எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை இன்று(19) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்தக் கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு, இன்று(19.01.2026) காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாத நிலையில், வழக்கினை இன்று(19) பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பௌத்த மதகுருமார்களும், ஏனைய பொதுமக்களும் பலத்த பாதுகாப்புடன் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பௌத்த மதச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் எனப் பெருமளவிலானோர் நீதிமன்ற வளாகத்தில் சமூகமளித்துள்ளனர்.

இதன் காரணமாக நீதிமன்றச் சூழலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில், நீதிமன்றின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

24 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

49 0 0