முல்லைத்தீவில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு.!
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக தென்னை முக்கோண வலயத்துக்கான தென்னங்கன்றும் பராமரிப்பு செலவீனமும் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைப் பயிர் செயற்கையை அதிகரிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்காக சுதந்திரபுர கிராமத்தில் உள்ள 35 பயனாளிகளுக்கு 1 ஏக்கருக்கு 30000 ரூபாய் வீதம் பராமரிப்பு நன்கொடையும், 5500 தென்னங்கன்றுகளும் தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயகொடி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொது முகாமையாளர் அத்தில விசயசிங்க அவர்களும், பிரதி பொது முகாமையாளர் N.S.ஜெயலத், உதவி பொது முகாமையாளர் தே.வைகுந்தன், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் திருமதி சென்சிகா ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட்டத்தக்கது.




