அவசர வேண்டுகோள்; கண்டவர்கள் பொலிஸாருக்கோ தினகரனுக்கோ அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றோம்.!
ஈசா எனப்படும் நவரத்ன சதீஸ் என்பவர் நாட்டின் பல பாகங்களிலும் பெருமளவான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இவருக்கு கல்கிஸை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதுடன், பல வாள்வெட்டு சம்பவங்கள், வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்தல், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் பல திருமணங்கள் செய்திருப்பதுடன் இவரது மூன்றாவது மனைவியின் தம்பியின் மனைவியை கள்ளத் திருமணம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஊடகங்களில் பணிபுரிவதாக கூறி ஊடகங்களின் உபகரணங்களை திருடி மோசடி செய்தல், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது அவதூறு பரப்புதல் போன்ற செற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த நபர் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று கூலிப்படையாக செயற்பட்டு வருவதுடன் வீடுகளின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்துதல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஒரு பாரிய குற்றவாளி என்பதால் இவருக்கு வீடோ அல்லது விடுதி அறைகளோ வழங்க வேண்டாம் என வேண்டி நிற்கின்றோம். காரணம் இவர் பல விடுதிகளில் அறைகள் எடுத்து தங்கி விட்டு அதற்குரிய பணத்தினை செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் சமீபத்தில் தினகரன் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் ஈடுபட்டு வந்த பல குற்றச் செயல்கள் தொடர்பில் பெருமளவு ஆதாரங்கள், குரல் பதிவுகள், காணொளிகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு பொலிஸார் அழைப்பாணை விடுத்தும் இவர் பாசாங்கு காட்டி பொலிஸாரின் தொடர்பை துண்டித்து தலைமறைவாகி திரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது குற்றப்புலனாய்வு துறைக்கு அல்லது 00447747568357 எனும் தினகரனின் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு மக்களை வேண்டி நிற்கின்றோம்.