உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் தான் அநுர யாழிற்கு செல்கிறாராம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

சிறையில் அடைத்தாலும் எமது அரசியல் பயணம் தொடரும். தேசியத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிப்போம். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த காரணத்தால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு செல்கிறார். அச்சமில்லாமல் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுகிறார். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அரசியல் கட்சி என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டோம். அதனால் தான் எமது அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். ஆகவே இனிவரும் காலங்களில் சிறந்த முறையில் அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்.

தேசியத்தை முன்னிலைப்படுத்தியே நாங்கள் ஆட்சியமைப்போம். தேசியத்துக்காக குரல் கொடுப்பவர்கள் எம்முடன் இணையலாம். இந்த அரசாங்கம் தேசியத்துக்கு எதிராகவே செயற்படுகிறது.

பல்வேறு காரணிகளால் கடந்த காலங்களில் பொதுஜன பெரமுனவை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். அனைவரையும் இணைத்துக் கொண்டு பயணிக்கவே எதிர்பார்க்கிறேன்.

அரசாங்கம் அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. 88 மற்றும் 89 ஆண்டு காலப்பகுதிகளில் செயற்பட்டதை போன்று இனி செயற்பட முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். சிறையில் அடைத்தாலும் எமது அரசியல் பயணம் தொடரும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

23 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

47 0 0