உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவசர கலந்துரையாடல்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் இன்று அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 8 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து உள்பட 8 நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படும் என்றும், சுங்க வரி பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், கிரீன்லாந்தை முழு உரிமையுடன் அமெரிக்கா கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஜூன் மாதம் முதலாம் திகதிக்குள் எட்டப்படாவிட்டால் , இந்த சுங்க வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் இன்று அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியுடனான சர்வதேச உறவுநிலை மோசமடைந்து வருவதுடன் டொனால்ட் டிரம்பின் திட்டம் “முற்றிலும் தவறானது” என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.இதனிடையே கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டொனால்ட் டரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0