உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
34 பார்வைகள்

சிலியின் தெற்கில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை (18) பேரழிவு நிலையை ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்தார்.குறைந்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறைந்தது 20,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.மேலும், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையான நிலவரப்படி,நாடு முழுவதும் பதிவான 24 தீ விபத்துகளை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சிலியின் CONAF வனவியல் நிறுவனத்தின தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மிகப்பெரியது Ñuble மற்றும் Bío Bío பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தானது – அங்கு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது. இந்தப் பகுதிகள் தலைநகர் சாண்டியாகோவிலிருந்து சுமார் 500 கி.மீ தெற்கே உள்ளன.

இரண்டு பிராந்தியங்களிலும் இதுவரை கிட்டத்தட்ட 8,500 ஹெக்டேர் (21,000 ஏக்கர்) தீ விபத்துக்களை சந்தித்துள்ளன.இதனால் பிராந்தியத்தில் உள்ள பல சமூகங்கள் ஆபத்தில் உள்ளன.

சிலியின் செனாப்ரெட் பேரிடர் நிறுவனம், குறித்த பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 20,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், குறைந்தது 250 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0