உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஈரான்.. அதிகரிக்கும் அச்சம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

உலக வரலாற்றிலேயே மிகக் கடுமையான இணைய முடக்கங்களில் ஒன்றை ஈரான் தற்போது எதிர்கொண்டு வருகிறது.கடந்த ஜனவரி 8ஆம் திகதி முதல், ஈரானில் முழுமையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 9.2 கோடி மக்கள் இணையம், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி சேவைகளின்றி தவித்து வருகின்றனர்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், அரசின் அடக்குமுறைகள் குறித்து சர்வதேச கவனம் செல்லாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதற்குப் பதிலளித்த ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, வெளிநாடுகள் வழிநடத்தும் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாகவே இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இணைய சேவைகள் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பது குறித்து ஈரான் அரசு இதுவரை தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.ஆனால், ஜனவரி 15ஆம் திகதி IranWire வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புத்தாண்டான மார்ச் இறுதி வரை சர்வதேச இணைய அணுகல் வழங்கப்படாது என அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமே மொஹாஜெரானி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0