உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நகர்வு! அவசர ஆலோசனையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
33 பார்வைகள்

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நட்பு நாடுகள் மீது இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குப் புதிய வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.முதற்கட்டமாக எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பின்னர் அது 25 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக அவசியம் என்று வாதிடும் ட்ரம்ப், தேவையேற்பட்டால் அதனைப் பலவந்தமாக கைப்பற்றுவதையும் நிராகரிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.இந்தநிலையில், ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது: அதற்கமைய, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் “முற்றிலும் தவறானது” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், இதனை “ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என வன்மையாகக் கண்டித்துள்ளார்.டென்மார்க் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான நகர்வுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த வரி மிரட்டலால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போக்கினை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் இன்று கூடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

40 0 0