உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஸ்பெயினில் அதிவேக தொடருந்துகள் மோதி -கோர விபத்து..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
35 பார்வைகள்

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்றுள்ள அதிவேக தொடருந்து விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஸ்பெயின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.கோர்டோபா (Cordoba) நகரத்திற்கு அருகிலுள்ள அடமுஸ் (Adamuz) பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்பெயின் தொடருந்து திணைக்களத்தின் தகவலின்படி, ஒரு அதிவேக தொடருந்து தண்டவாளத்தை விட்டு விலகி அருகிலிருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்ற தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.அதே நேரத்தில், ஹுயெல்வா நோக்கி எதிர்திசையில் பயணித்த மற்றொரு தொடருந்திலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சுமார் 73 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு முழுவதும் பாரிய துக்கம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்ட நேரத்தில் 300-க்கும் அதிகமான பயணிகள் குறித்த தொடருந்துகளில் பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, ஸ்பெயினின் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0