உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பில் பொலிஸாருடன் இடம்பெற்ற பெரும் கைகலப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரியை கைது செய்ய பொலிஸார் முற்பட்டபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டு கசிப்பு வியாபாரியை கைது செய்யவிடாது தடுத்து தப்பியோட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்புதோட்டம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை (17) மாலை 4.30 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 62 வயதுடைய நபரை 180 மில்லி கிராம் கசிப்புடன் கைது செய்து அங்கிருந்து கொண்டு செல்வதற்கு பொலிஸார் முயற்சித்த போது அவரின் உறவினர்களான பெண்கள் உட்பட்ட குழுவினர் பொலிஸாரை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது குறித்த சட்டவிரோத கசிப்பு வியாபாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு எதிராக 15 பேர் கொண்ட குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவத்தினையடுத்து பொலிஸார் அவர்களை காணொளி, படம் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.இந்நிலையில் பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து கரடியனாறு பகுதிக்குள் தப்பியோடிய போது கரடியனாறு பொலிஸார் அவரை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கடமையை செய்யவிடாது தடுத்த மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பெண்கள் உட்பட 5 பேரை இன்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0