உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோருக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.நேட்டோ கூட்டணியின் பாதுகாப்பை உறுதி செய்ய இங்கிலாந்து ராணுவம் அங்கு மேற்கொண்ட சிறிய அளவிலான நடவடிக்கையை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து, இங்கிலாந்து மீது புதிய வர்த்தக வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலடியாக, ட்ரம்ப்பின் அணுகுமுறை முற்றிலும் தவறானது என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

வழக்கமாக அமெரிக்காவுடன் இணக்கமான உறவைப் பேண விரும்பும் ஸ்டார்மருக்கு, இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் இந்த வரி அச்சுறுத்தல் பெரும் சவாலாக மாறியுள்ளது.தற்போதைய சூழலில், இங்கிலாந்தின் எதிர்க்கட்சிகளும் அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து, ட்ரம்ப்பின் அதிரடிப் போக்கைக் கண்டித்துள்ளன.

இந்நிலையில் இந்தப் பதற்றமான சூழலைச் சமாளித்து இங்கிலாந்தின் நலன்களைப் பாதுகாப்பது ஸ்டார்மர் அரசுக்கு ஒரு கடினமான சோதனையாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0