உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஜனவரி மாத இறுதி மற்றும் பிப்ரவரியில் இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, தற்போதைய மிதமான வெப்பநிலை மறைந்து, கிழக்கு திசையிலிருந்து வீசும் கடும் காற்றினால் நாடு முழுவதும் உறைபனிச் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே வீசிய ‘கோரெட்டி’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளைத் தொடர்ந்து, எதிர்வரும் வாரங்களில் பனி சார்ந்த அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக மழை மற்றும் அடர் மூடுபனி நிலவும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வானிலை மாற்றம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பதால், அன்றாட இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0