உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆபத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
57 பார்வைகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மீண்டும் கவலைக்குரிய நிலையில் உள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) எச்சரித்துள்ளது.

சேதமடைந்த கடைசி காப்பு மின் கம்பியை (backup power line) பழுதுபார்க்க அனுமதிக்கும் வகையில், ரஷ்யாவும் உக்ரைனும் தற்காலிக, உள்ளூர் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக IAEA தெரிவித்துள்ளது.

இந்த மின் இணைப்பு, சமீபத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளால் துண்டிக்கப்பட்டது.IAEA வெளியிட்டுள்ள அறிக்கையில்,பழுதுபார்ப்புப் பணிகள் வரும் நாட்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்காவது தற்காலிக போர்நிறுத்தம், அணு பாதுகாப்பை உறுதி செய்வதில் IAEA தொடர்ந்து வகிக்கும் முக்கிய பங்கைக் காட்டுகிறது,” என அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி கூறினார்.

அதே நேரத்தில், அணுமின் நிலையத்திற்கு அருகே பல வெடிப்பு சத்தங்கள், தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள், மேலும் அந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இராணுவ பறக்கும் பொருள் காணப்பட்டதாக IAEA குழு தெரிவித்துள்ளது.இது அணு பாதுகாப்பு குறித்து மேலும் கவலை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0