உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிரீன்லாந்தை இலக்கு வைக்கும் சீனா – ரஷ்ய அச்சுறுத்தல்! வல்லரசுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
59 பார்வைகள்

கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் உலக அமைதியை மேற்கோள் காட்டி, டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட truthsocial அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

2026 பெப்ரவரி 1 முதல் டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என்றும் தனது பதிவில் கூறியுள்ளார்.தொடர்ந்து, 2026 ஜூன் 1 முதல் இந்த வரி 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த வரி விதிப்பு, கிரீன்லாந்தை அமெரிக்கா “முழுமையாக வாங்கும்” ஒப்பந்தம் எட்டப்படும் வரை தொடரும் என டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன்லாந்தை வாங்க முயன்று வருவதாகவும், பல ஜனாதிபதிகள் இதற்காக முயற்சித்தாலும் டென்மார்க் தொடர்ந்து மறுத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சீனா மற்றும் ரஷ்யா கிரீன்லாந்தில் ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனால் உலக பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், “கோல்டன் டோம்” எனப்படும் நவீன பாதுகாப்புத் திட்டங்களின் செயல்திறனுக்கும் கிரீன்லாந்து முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய “வலுவான நடவடிக்கைகள் அவசியம்” என்றும் ட்ரம்ப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0