உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
45 பார்வைகள்

வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.வெனிசியூலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசியூலா படையினர் கொல்லப்பட்டனர் .

மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர்.இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசியூலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.தாக்குதலின்போது கொல்லப்பட்ட பொது மக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.

தாக்குதலில் கொல்லப்பட்ட படையினருக்காக வெனிசியூலாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என இடைக்கால ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் 112 வரையான வெனிசியூலா படையினர் காயமடைந்துள்ளனர்.வெனிசியூலாவில் கொல்லப்பட்ட தமது நாட்டு படையினரை கியூபா பொறுப்பேற்று, அவர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0