உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

11 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானம் விபத்து.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
48 பார்வைகள்

11 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது.இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகருக்கு பறந்து கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் 3 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர்.பறந்து சென்ற 12 மைல்களுக்குப் பிறகு மர்மமான முறையில் விமானம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரேடார் அமைப்புகளிலிருந்து மறைந்துவிட்டது.காணாமல் போன விமானத்திலிருந்து கடைசி சமிக்ஞை உள்ளூர் நேரப்படி காலை 11:20 மணிக்கு கிடைத்துள்ளது.

விமானம் கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு அருகில், மரோஸ் ரீஜென்சியின் மலைப்பகுதிக்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்கள் மூலம் விமானம் தேடப்பட்டு வந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மலையின் ஒருபகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, விமானம் மாயமானதாகக் கூறப்படும் மலைப்பகுதிகளில் இருந்து கரும்புகை எழும்புவது, விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0