உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

75 நாடுகளின் விசாக்களை முடக்கியது அமெரிக்க வெளியுறவுத்துறை! தீவிரமாகும் நடவடிக்கை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
46 பார்வைகள்

ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி,

ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

விசா விண்ணப்பதாரர்களைப் பரிசோதிக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை, தற்போதைய சட்டங்களின் கீழ் விசாக்களை நிராகரிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதேவேளை தற்போதைய தகவல்களின்படி, அமெரிக்கா விசா நடைமுறைகளை நிறுத்தி வைத்துள்ள 75 நாடுகளின் பட்டியலில் இலங்கை அதிகாரபூர்வமாக இடம்பெறவில்லை. இலங்கை இந்தப் பட்டியலில் இல்லாவிட்டாலும், அமெரிக்காவின் புதிய நிர்வாகம் (ட்ரம்ப் நிர்வாகம்) அனைத்து நாடுகளுக்குமான “Extreme Vetting” எனப்படும் தீவிர பாதுகாப்புப் பரிசோதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் இலங்கை மாணவர்களுக்கான மற்றும் சுற்றுலா (B1/B2) விசா நேர்காணல்கள் மற்றும் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

பட்டியலில் உள்ள நாடுகளுடன் (உதாரணமாக ஈரான், நைஜீரியா, ரஷ்யா) வர்த்தகம் அல்லது கல்வித் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதில் கூடுதல் கேள்விகள் கேட்கப்படலாம்.

அமெரிக்காவைத் தொடர்ந்து பல வளர்ந்த நாடுகளும் தங்களது குடியேற்றக் கொள்கைகளை இறுக்கமாக்கியுள்ளன .தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை (International Students & Work Permits) 20% ஆல் கனடா குறைத்துள்ளது. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு விசா வழங்குவதை கனடா மட்டுப்படுத்தியுள்ளது.

மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தகைமையை (IELTS/PTE) அவுஸ்திரேலியா அதிகரித்துள்ளதுடன், போலி கல்வி நிறுவனங்கள் மூலம் விசா பெறுவதைத் தடுக்க ‘Genuine Student’ என்ற புதிய கடுமையான சோதனையை அமல்படுத்தியுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வருவதற்கான தடையை பிரித்தானியா தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், வேலை விசா பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பையும் கணிசமாக உயர்த்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0