உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.இதற்குப் பதிலடியாக, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் கிரீன்லாந்திற்குத் தங்களது இராணுவ வீரர்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறிய இராணுவக் குழு கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.இவர்களுடன் ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இணைந்து ‘Operation Arctic Endurance’ என்ற கூட்டுப் பயிற்சியின் கீழ் தங்களது வீரர்களை நிலைநிறுத்தி வருகின்றன.அமெரிக்காவிற்கு ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்லவே இந்த வீரர்களை அனுப்பியுள்ளோம். நேட்டோ இங்கே இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை” என்று பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒலிவியர் போயிவ்ரே டி ஆர்வோர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம்.நாங்கள் அதைக் கைப்பற்றாவிட்டால் ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதைக் கைப்பற்றும்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.மேலும், “டென்மார்க்குடன் பேசி ஒரு தீர்வை எட்டுவோம் என்று நினைக்கிறேன்.

ஆனால், பேச்சுவார்த்தை பலிக்காவிட்டால் ‘கடினமான வழிமுறை’ (Hard way) கையாளப்படும்” என்று இராணுவ நடவடிக்கைக்கான குறிப்பையும் அவர் வழங்கியுள்ளார்.இதேவேளை “இது 2026-ஆம் ஆண்டு. நீங்கள் மக்களுடன் வர்த்தகம் செய்யலாம், ஆனால் மக்களையே வர்த்தகம் செய்ய முடியாது” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அமெரிக்காவின் சொத்தாகவோ அல்லது அவர்களால் ஆளப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் நாங்கள் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம்” என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பெடெரிக் நீல்சன் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0