உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெனிசுவேலாவின் மற்றொரு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வெனிசுவேலாவின் மற்றுமொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவினால் இதுவரையில் இந்த ஆண்டில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆறாவது எண்ணெய் கப்பல் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டர் டாங்கர் வெரோனிகா என்ற கப்பல், கரீப்பியன் கடலில் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.கப்பல் திட்டமிட்டிருந்த கரீப்பியன் கடல் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்டது எனவும் அதனால் அதிரடி நடவடிக்கையாக கைப்பற்றப்பட்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க அரசு, வெனிசுவேலாவின் எண்ணெய் விற்பனை, சீர்திருத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நோக்கங்களின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்கிறது.

இதுவரை இதை போன்ற ஆறு கப்பல்கள் அமெரிக்க படைத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வெனிசுவேலாவிலிருந்து வெளியேறும் எண்ணெய், சரியான மற்றும் சட்டபூர்வமான முறையில் வெளியேறுவதனை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0