உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பங்களாதேச தேர்தல் அனைவரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
55 பார்வைகள்

அனைவரையும் உள்ளடக்கி, பங்கேற்புடன் கூடிய அமைதி மற்றும் வௌிப்படைத்தன்மை மிக்கதாக பங்களாதேச தேர்தல் அமைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பங்களாதேசத்திற்கான பிரதம பார்வையாளரான இவர்ஸ் இஜாப்ஸ் டாக்காவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற வெகுஜன எழுச்சியைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கப்பட்டதோடு ஹசீனாவும் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அந்த அரசாங்கத்தின் அறிவிப்புக்கு அமைய பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி பங்களாதேச பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள ஜரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பங்களாதேசத்திற்கான பிரதம பார்வையாளர், பங்களாதேசத்தின் எதிர்வரும் தேசியத் தேர்தல் வெளிப்படையானதாகவும் பங்கேற்புத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளது.

வாக்களிப்பை அமைதியாக நடத்த வேண்டும். ஜனநாயக செயல்பாட்டில் வாக்காளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க இது உதவும். ஜனநாயகப் பயணத்தில் தேர்தல் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0