இந்தியாவில் முதலிட உலகளாவிய அழைப்பு.!
உலகம் நிச்சயமற்ற தன்மைக்கு முகம் கொடுத்துள்ள தற்போதைய நிலையில் இந்தியாவில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னொரு போதும் இல்லாத வகையில் அரசியல் ஸ்தீரத்தன்மையையும் உறுதிப்பாட்டையும் கொண்ட தசாப்தத்தை இந்தியா அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் குஜராத் பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, உலகில் வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது.
அது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி முன்னேறி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா மிக விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. குஜராத் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் வெளிவரும் புள்ளிவிபரங்கள் இந்தியாவிடமிருந்து உலகின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன,உலகில் அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடாக விளங்கும் இந்தியா, அபிவிருத்தி, சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைச் சுற்றி வருகிறது. நாட்டிலும் உலகிலும் உள்ள ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இதுவே சரியான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.