உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

டாவோஸ் மாநாட்டில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
39 பார்வைகள்

உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகி, 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளார்.

பிரதமருடன் இணைந்து பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவும், வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் அங்கு செல்லவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள், கொள்கை நிர்ணயாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான நடைமுறை வழிகள் குறித்து அவர் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

உலகின் அரசியல், பொருளாதார திசைகளை தீர்மானிக்கும் முக்கிய மேடையாகக் கருதப்படும் டாவோஸ் மாநாட்டில் இலங்கைப்  பிரதமரின் பங்கேற்பு, நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கு சர்வதேச கவனத்தை மேலும் ஈர்க்கும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

114 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

53 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

61 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

56 0 0