கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பத்து இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.