லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீள அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.