ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் – 646 பேர் உயிரிழப்பு.!
ஈரான் முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானில் தொடரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
குறித்த போராட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை ஈரான் அரசு வெளியிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.