உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால், வைத்தியசாலையின் பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இன்று கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிர்வாக சீர்கேடு இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனவே வைத்திய பணிப்பாளரை உடன் இடமாற்றக் கோரி மனித உரிமை அமைப்புக்களினால் கடந்த 04ஆம் திகதி போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அடிதடி கலாச்சாரத்தை உடன் நிறுத்துமாறும் வைத்திய பணிப்பாளரை உடன் வெளியேற்றி, நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வைத்தியரை, அதிகாரத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதிக்கு அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று, வைத்தியசாலையில் இடம்பெற்ற சீர்கேடுகள் தொடர்பான மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிவையில் இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

45 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

67 0 0