உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்ய எண்ணெய் கப்பல்களை வேட்டையாட… பிரித்தானியாவின் ஹெலிகொப்டர் படை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
85 பார்வைகள்

ரஷ்யா பயன்படுத்தும் சட்டத்திற்கு புறம்பான எண்ணெய் கப்பல்களை வேட்டையாட பிரித்தானியாவின் சிறப்புப்படையினர் ஹெலிகொப்டர்களில் களமிறங்க உள்ளனர்.கடந்த வாரம் அட்லாண்டிக் பெருங்கடலில் நடந்த ஒரு அதிரடித் தாக்குதலில், ரஷ்யாவுடன் தொடர்புடைய ஒரு சட்டவிரோத எண்ணெய் கப்பலைக் கைப்பற்ற பிரித்தானிய அரசு அமெரிக்க சிறப்புப் படைகளுக்கு உதவியது.

இருப்பினும், எந்தவொரு பிரித்தானிய இராணுவ வீரரும் அந்த கப்பலில் கால் பதிக்கவில்லை. ஆனால், தற்போது அரசாங்கத்தால் கண்டறியப்பட்ட ஒரு புதிய சட்டத்தின் அடிப்படையில், செல்லுபடியாகும் தேசியக் கொடி இல்லாமல் இயங்கும் கப்பல்கள் மீது சிறப்புப் படை வீரர்கள் சட்டப்பூர்வமாக முற்றுகையிட முடியும்.

ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளைத் தவிர்க்க நூற்றுக்கணக்கான சட்டத்திற்கு புறம்பான எண்ணெய் கப்பல்களை விளாடிமிர் புடின் நிர்வாகம் களமிறக்கியுள்ளது.தொடர்புடைய கப்பல்களே சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகம் செய்து வருகிறது.இனி இந்த எண்ணெய் கப்பல்கள் பிரித்தானிய ஆயுதப் படைகளால் குறிவைக்கப்படலாம்.

பிரித்தானிய கடல் எல்லைகளில் அடிக்கடி பயணிக்கும் இந்தக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ரஷ்யாவின் இப்படியான கப்பல்களில் 500-க்கும் மேற்பட்டவை மீது பிரித்தானிய அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இருப்பினும், செயற்பாட்டில் உள்ள கப்பல்கள் மீது தற்போது, பிரித்தானியா துருப்புக்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.வெளியான தகவலின் அடிப்படையில், கடலில் பறிமுதல் செய்வதற்கான வழிமுறைகளையும் பிரித்தானிய அரசாங்கம் உருவாக்கி வருகிறது.

கடந்த வாரம், மரினேரா என்ற எண்ணெய்க் கப்பல் வெனிசுலா மீதான அமெரிக்காவின் எண்ணெய் தடைகளை மீறியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.இதனிடையே, ட்ரம்பின் வெனிசுலா முற்றுகையைத் தவிர்ப்பதற்காக மரினேரா எண்ணெய் கப்பல் முயற்சி செய்த நிலையில், அதைப் பாதுகாக்கும் வகையில் ரஷ்ய நிர்வாகம் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியிருந்தனர்.

ஆனால், ரஷ்யாவின் முயற்சிகளை முறியடித்து, அமெரிக்க இராணுவம் அந்தக் கப்பலைக் கைப்பற்றியது. தற்போது, 2018 ஆம் ஆண்டின் தடைகள் மற்றும் பணமோசடிச் சட்டத்தினை சாதகமாகப் பயன்படுத்தி, பிரித்தானியாவும் சொந்த பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவ பலத்தைப் பயன்படுத்தக்கூடும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0