உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! ஈரானிலிருந்து வெளியேறுமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
51 பார்வைகள்

ஈரானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஈரான் மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்கள் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.இந்த நிலையில், அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானில் ஏற்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக உருவாக கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதனால், கைது நடவடிக்கைகளும், காயங்களும் ஏற்படகூடும். ஈரான் அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஈரானில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா, ஈரானை எச்சரித்து வருகின்றது.

இந்நிலையில், குறித்த போராட்டங்களில் சுமார் 500 பேர் இறந்துள்ளதாகவும் ஈரானிய அரச ஊடகம் நிலைமையை சாதாரணமாக காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0