உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவில் விசா இரத்து நடவடிக்கை தீவிரம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக இரத்து செய்துள்ளது.இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 8 ஆயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்கள் உள்ளிட்ட 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் இரத்து செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதன்பின்னர் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள்.அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர், குடியேற்ற விதிகள் மற்றும் சட்டங்களை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில், தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தவும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க சட்டங்களை மீறி நடந்து கொள்பவர்கள் குறிப்பிடும்படியாக மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தது. இதனால், அவர்களின் விசாக்கள் இரத்து செய்யப்படுவதுடன், நாடு கடத்தவும் செய்யப்படுவார்கள். வருங்காலத்தில் அமெரிக்க விசா பெற தகுதியற்றவர்களாகவும் ஆகி விடுவார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0