ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!
பேலியகொடை 04வது மைல்கல் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் களனி பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.