உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நெல் விலையை அதிகரிக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.

“நெல் விலை திருத்தம் தொடர்பாக ஏற்கனவே நாங்கள் விடயங்களை முன்வைத்துள்ளோம்.

குறிப்பாக நாட்டு நெல் 120 ரூபாவாகவே நீடிக்கும். சம்பா நெல்லின் விலை 125 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை அதிகரிக்கப்படும். விவசாயிகளின் தரப்பைப் பொறுத்தவரை கீரி சம்பா 132 ரூபாவிலிருந்து 140 ரூபா வரை அதிகரிக்கப்படும்.” என்றார்.

எந்தக் காலப்பகுதியில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படும் அமைச்சரே?

“எதிர்வரும் போகம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும். அறுவடை செய்யும் போது விவசாயிகளால் அந்த விலைகளுக்கு நெல்லை வழங்க முடியும். ஆனால், அதற்கு இணையாக அரிசி விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை. அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கும் எதிர்பார்ப்பும் இல்லை.”

ஏனைய ஆண்டுகளில் இக்காலப்பகுதியில் நாட்டில் ‘அரிசி மாஃபியா’ செயற்பட்ட போதிலும், இந்த ஆண்டு இக்காலப்பகுதியில் அது இடம்பெறவில்லை” என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

45 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

67 0 0