உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் ராஜதந்திரிகள் தொடர்பில் ஐரோப்பாவின் அதிரடி உத்தரவு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஈரானின் ராஜதந்திரிகள் ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதனை தடை செய்யும் அதிரடி உத்தரவு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் பிறப்பித்துள்ளது.ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் ரோபெர்டா மெட்சோலா இந்த உத்தரவு குறித்து அறிவித்துள்ளார்.

ஈரானைச் சேர்ந்த அனைத்து ராஜதந்திரிகள் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நபர்களும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், “ஈரானின் துணிச்சலான மக்கள் தங்கள் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வழக்கம்போல செயல்பட முடியாது” என மெட்சோலா தெரிவித்துள்ளார்.

சித்திரவதை, அடக்குமுறை மற்றும் கொலைகள் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ள இந்த ஆட்சியை சட்டபூர்வமாக்க உதவும் எந்த நடவடிக்கையிலும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஈடுபடாது என வலியுறுத்தியுள்ளார்.

இந்த முடிவு, ஈரானில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0