உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வசதி குறைந்த மாணவர்கள் 2000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கொட்டகலை பிரதேசத்தில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் போது குத்து விளக்கேற்றி திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பிரதேச சபை உறுப்பினர்களான கண்ணதாசன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து, ஹரிங்டன், வூட்டன் மற்றும் பெரக்கும்புர வித்தியாலயங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந்தத் திட்டத்தின் ஊடாக மொத்தமாக 2,000 மாணவர்கள் பயனடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

67 0 0