உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மலையக தமிழ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அமெரிக்க தேசிய அணியின் வலைப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் அபிஷேக் என்ற இளைஞர், எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் வலை பயிற்சிகளுக்கான பந்துவீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அபிஷேக் தற்பொழுது இலங்கை மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அணியின் வீரர்களுக்கு பந்து வீசி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அபிஷேக் பொஸ்கோனியன்ஸ் விளையாட்டு கழகத்தின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.அபிஷேக் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் மாணவர் என்பதுடன் குறித்த மாணவர் வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்துவீச்சாளராகவும் சகல துறை வீரராகவும் திகழ்ந்து வருகின்றார்.அண்மை காலமாக நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்று வரும் போட்டி தொடர்களில் அபிஷேக் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணிகள் அல்லது முனன்ணி கழகங்களின் துடுப்பாட்ட வீரர்களின் வலைப் பயிற்சியின் போது திறமையான பந்து வீச்சாளர்களை கொண்டு பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.இவ்வாறு பந்து வீசக் கூடிய வீரர்களே வலைப்பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

63 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

44 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

61 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

65 0 0