உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பாராளுமன்ற போதைப்பொருள் விவகாரம் – சபாநாயகர் விசேட அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்” என்ற தலைப்பில் வெளியான செய்தி அடிப்படையற்ற பொய்யான செய்தி என சபாநாயகர் வலியுறுத்தியிருப்பதாக இலங்கை பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஊழியர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை பாராளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் வழங்கவில்லையென்றும் இலங்கை பாராளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், உணவறைப் பகுதிக்குள் சில ஊழியர்கள் இரகசியமாக மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்ததையடுத்து சபாநாயகர், இது தொடர்பான ஆலோசனையை வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பொய்யானது என்றும், அவ்வாறான சூழ்நிலைஉருவாவதற்கு இடமளித்தமை தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றத்தின் உயரதிகாரிகளைக் குற்றஞ்சாட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் எந்தவிதமான அடிப்படையுமற்ற பொய்யான தகவல்கள் என்றும் பாராளுமன்ற செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

44 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

61 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

65 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

54 0 0