உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தமிழரசின் மன்னார் மாவட்டக்கிளை உறுப்பினர்களுடன் சத்தியலிங்கம் எம்.பி சந்திப்பு…!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளை உறுப்பினர்களை இன்று (12.01) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

கட்சியின் மன்னார் மாவட்டக் கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிற்பாடு சபைகளில் ஆட்சியமைத்தலின் போது ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டது.

மேலும் சமகால அரசியல் நிலவரங்கள் உட்பட கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

63 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

44 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

61 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

65 0 0