உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சட்டவிரோத மணல் கடத்தல் – டிப்பர் சாரதி கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பர் சாரதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (12.01.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த டிப்பர் சாரதியே கைதாகியுள்ளார். இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை திடீரென சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸார், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பருடன் சாரதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி டிப்பருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

41 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

53 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

65 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

53 0 0