உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே…! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்த கடுமையான சர்வதேச சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விக்கிபீடியா பக்கத்தில் திருத்தப்பட்ட தனது புகைப்படத்தை தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், அமெரிக்காவின் 45 ஆவது மற்றும் 47 ஆவது ஜனாதிபதி என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், வெனிசுலாவின் பொறுப்பு (தற்காலிக) ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவில் வேறு எந்த தகவலையும் ட்ரம்ப் பகிரவில்லை எனவும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது ட்ரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், இம்மாத தொடக்கத்தில், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0