உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக நாட்டை வந்தடைந்துள்ளார். இவர் இன்று (12.01.2026) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

சீனாவிற்கு சொந்தமான பீஜிங் விமான சேவையின் விசேட விமானம் ஊடாக அவருடன் சீன வெளியுறவு அமைச்சின் 17 சிரேஷ்ட அதிகாரிகள் வருகை தந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென்ஹொன்க் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை – சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏனைய மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு முயற்சிகள் போன்ற பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மூத்த அரச தலைவர்கள், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

52 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

63 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

53 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0