உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஈரான்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
48 பார்வைகள்

ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்ததாவது,

ஈரானில் வரம்பு மீறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. கொல்லப்படக்கூடாத சில நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலைவர்களைப் பற்றிப் பேசினால், அவர்கள் தலைவர்களா அல்லது வன்முறை மூலம் ஆட்சி செய்பவர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

நாங்களும், இராணுவமும் இதை மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறோம். மேலும் நாங்கள் சில கடும் நடவடிக்கைகளை எடுக்க மாற்று வழிகளையும் பரிசீலித்து வருகிறோம். ஈரான் அமெரிக்காவைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்தது.

எனது நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0