உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தந்தையின் கண்முன்னே மகளுக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தந்தையுடன் வீதியில் நடந்து சென்ற 8 வயது சிறுமி ஹயஸ் வாகனம் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குருநாகல் மாவட்டம், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுமி தனது தந்தையுடன் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர்களின் பின்னால் அதிவேகமாக வந்த ஹயஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் சிறுமி கடுமையாகக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிறுமியின் தந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். அவரது நிலை ஆபத்தானதல்ல என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற உடனேயே பொலிஸார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விபத்துக்குக் காரணமான ஹயஸ் வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

52 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

63 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

53 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0