உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நோபல் பரிசை ட்ரம்புக்கு கொடுக்க விருப்பம் தெரிவித்த மரியா! கமிட்டி கொடுத்த பதிலடி.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
53 பார்வைகள்

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கப்பட அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் ட்ரம்ப்புக்கு கைமாற்ற மரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வென்றார்.இவர் வெனிசுலா ஜனாதிபதி மதுரோவின் தீவிர எதிர்ப்பு நிலை கொண்டனர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடைய ஆதரவாளராவார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து, தலைநகர் காரகஸில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தி அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்நிலையில் தனக்கு வழங்கப்பட அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் ட்ரம்ப்புக்கு கைமாற்ற மரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நோபல் கமிட்டி, “நோபல் பரிசை ஒருமுறை அறிவித்த பிறகு, அதை மாற்றவர், யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது ரத்து செய்யவோஇயலாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.நேற்று முன் தினம்(9) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “இந்தியா பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்.

மேலும் 7 போர்களை நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி சிலியா ரோட்ரிக்ஸ் பதவி ஏற்றுள்ளார்.

மரியா கொரினா மச்சாடோ, “வெனிசுலா அதிபராக ஆதரவு தருவீர்களா என்ற கேள்வுக்கு பதிலளித்த ட்ரம்ப், அவருக்கு நோபல் விருதை கொடுத்திருக்கவே கூடாது. அவருக்கு உள்நாட்டில் மக்களிடம் பெரிய செல்வாக்கு இல்லை” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0